பாடசாலை கீதம்
வாழ்த்துவோம் வாழ்த்துவோம் வாழ்த்துவோம்
மங்கையர்கள் இங்கு கூடி மான்பு பெற்று விளங்கிடச்
செங்கமலத் தாள் பணிந்து சேமமிங்கு பொழிந்திட
வாழ்த்துவோம் வாழ்த்துவோம் வாழ்த்துவோம்
கன்னித் தமிழ் கற்றுமே பன்மொழிகள் கற்கலாம்
வன் பகைகள் வென்றுமே வான் புகழைத் தேடுவோம்
வாழ்த்துவோம் வாழ்த்துவோம் வாழ்த்துவோம்
உண்மை என்றும் ஓங்கிட ஊக்கமோடு கன்னியர்
பண்ணொலித்துப் பாவிசைப்போம் ஆனைப்பந்தி தன்னிலே
வாழ்த்துவோம் வாழ்த்துவோம் வாழ்த்துவோம்
பரமஹம்ச தேவரிங்கு அன்னையோடு கூடியே
வரமருளி வாழ்த்துமிங்கு வாணியருள் நோக்குமே
வாழ்த்துவோம் வாழ்த்துவோம் வாழ்த்துவோம்
பாதிப்பிறை சூடுவோனை நாதியாகக் கொண்டு நாம்
கலை வளர்ந்து மனை வளர்க்கும் ஆனைப்பந்தி வாழ்கவே
வாழ்த்துவோம் வாழ்த்துவோம் வாழ்த்துவோம்